2025-2026 ஆம் நிதியாண்டிற்காக வறுமைக் கோட்டிற்குக் கீழ் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மானியத்தில் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 31.08.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101, என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். மேலும் தொடர்புக்கு தொலைபேசி தொடர்பு எண். 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக