திருப்பூர் அனுப்பர்பாளையத்தில்
அறப்போர் இயக்கத்தின் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பொதுமக்கள் இல்லங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கோவை மண்டல பொறுப்பாளர் வி.பி.எஸ். மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற கருத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது பொதுமக்களிடம் ஒருவர் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு மற்றொருவர் பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லியும் ஓட்டு செலுத்துகிறார்கள் இதில் யார் உயர்ந்தவர் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் பெற்றோர்கள் யார் மற்றும் உங்களிடம் ஒருவர் சொல்கிறார் நான் நேற்று உன் வீடு புகுந்து ஒரு லட்சம் திருடினேன் அதில் உனக்கு 2000 ரூபாய் தருகிறேன் உன் செலவுக்கு வைத்துக் கொள் என்றால் நீங்கள் செய்வது என்ன மற்றும் உங்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிக்கு அந்த பணம் எப்படி வந்தது என்று நினைக்கின்றீர்கள் மற்றும் அரசியல்வாதி ஓட்டுக்கு கொடுப்பது திருடிய பணம் என்றால் அதை நீங்கள் வாங்கும் பொழுது உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதா இது போன்ற விழிப்புணர்வு கேள்விகளையும் இதற்கு உண்டான கருத்துக்களையும் பொதுமக்களிடம் கேட்கப்பட்டது பொதுமக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம் நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று அறப்போர் இயக்க நிர்வாகிகளிடம் கூறினர் அறப்போர் இயக்கத்தின் இந்த என் ஓட்டு விற்பனைக்கு அல்ல கருத்து கேட்பு விழிப்புணர்வு நிகழ்வில் இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவன தலைவர் கலைவாணன் , என். கிருஷ்ணன், சுகுணா பி. செல்வராஜ், லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் விழிப்புணர்வு அமைப்பு பொறுப்பாளர் அ.காஜாமைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக