அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ காளியம்மன் பூவாடை காரிக்கு திருக் குறட நன்னீராட்டு பெருவிழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ காளியம்மன் பூவாடை காரிக்கு திருக் குறட நன்னீராட்டு பெருவிழா !

அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ காளியம்மன் பூவாடை காரிக்கு திருக் குறட நன்னீராட்டு பெருவிழா !
குடியாத்தம் , ஆகஸ்ட் 29 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாடி கிராமம் ஸ்டாலின் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விநா யகர் முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத் தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா மேளதாளம் நாதஸ்வரம் முழங்க. இன்று காலை சிறப்பு அபிஷேகத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பெரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா செழியன் தலைமை தாங்கினார் 
ஆலய நிர்வாகி ஓய்வு பெற்ற ஆசிரியர் குமாரசாமி முன்னிலை வகித்தார் இந்த‌ நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜியன் அரசு மருத்துவ மனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி தாசன் ஆகியோர் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் ஊர் பொ துமக்கள் பக்தகோடிகள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad