ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா வை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருக்கல்யாண வைபவ விழா!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 8 -
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா வருகின்ற செவ்வாய் மற்றும் புதன் திருவிழா நடைபெற இருப்பதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில்ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக் கல்யாண வைபவ விழா நடைபெற்றது திருப்பத்தூர் காமராஜர் நகர் ராமக்கா பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி யம்மன் ஆலயத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருக்கல்யாண வைப விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த திருக்கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டார் டி குமரேசன் சுமதி குடும்பத்தினர் கதிரவன் குரூப்ஸ் மற்றும் பெண் வீட்டார் டீ ஏ கண்ணன் உமாதேவி குடும்பத்தினர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்க்கு அன்ன தானம் வழங்கப்பட்டு சிறப்பு திரு கல்யாண வைபவம் சாமியை வழிபட்ட னர் கோயில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
மோ. அண்ணாமாலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக