நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் பங்கேற்பு.
 
நாசரேத், ஆகஸ்ட் 11, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.

நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் கலந்துகொண்டு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். போதைப் பொருள் ஒழிப்போம், நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம், போதை இல்லா தமிழகம், என் எதிர்காலம், என் தேர்வு என்ற கருத்து நிறைந்த வாசங்களை கூறியபடி மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். 

பேரணி, பள்ளியில் இருந்து புறப்பட்டு,நாசரேத் நகரத்தின் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு, பொது மக்களிடம் போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், போதைப் பொருள்களை ஒழிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அதன் பின்னர், பேரணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நாசரேத் நகரத்தின் முக்கிய தெருக்களின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர் வழிகாட்டுதலின்படி, உடற்கல்வி இயக்குனர் ஜெபசிங் கால்டுவெல், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், ஓவியக் கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், பிற ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad