கோவையில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக்கியவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு "சி சுப்பிரமணியம் வளாகம்" என்று பெயர் சூட்டப்பட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த காமராசர், முன்னாள் அமைச்சர் சி சுப்பிரமணியம், உறுப்பினர்கள் வி கே பழனிச்சாமி, மற்றும் பொள்ளாச்சி நா மகாலிங்கம், ஆகியோருக்கு நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து அச்சிலைகளுக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக