பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 ஆகஸ்ட், 2025

பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்


பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் பொதுவினியோக திட்ட ஆலோசனை மற்றும் எரிவாயு குறை தீர்ப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்றன. 


எரிவாயு விநியோகம் கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, எரிவாயு இணைப்பு புதுப்பிக்கும் பணிகள் ரேசன் கடைகள் வரியாக முகாம் நடத்த வேண்டும், எரிவாயு இணைப்பு பாதுகாப்பு பரிசோதனைகள் வீடுகளுக்கு சென்று பார்த்து மேற்கொள்ள வேண்டும்.


ரேசன் கார்டுகளில் முன்னுரிமை கார்டுகள் எந்தவித ஆய்வும் இல்லாமல் முன்னுரிமையற்ற கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. ரேசன் கார்டுகளில் எரிவாயு இணைப்பு இல்லாமல் இணைப்பு உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளதை மாற்றி தர வேண்டும். நியாய விலை கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ள வேண்டும் பொருட்கள் தரமானதாக உரிய முறைப்படி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் பதில் அளித்து பேசும்போது


எரிவாயு இணைப்பு புதுப்பிக்கும் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டன. புதுப்பிக்க முகாம்கள் நடத்த திட்டமிட்டு உள்ளது.  அதுகுறித்து முன்னரே தகவல் தெரிவிக்கப்படும். கிராமங்களுக்கு வாகனங்கள் செல்லும் பகுதிக்கு விநியோக செய்ய வாகன மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளபடும். எரிவாயு பாதுகாப்பு ஆய்வுகள் வீடுகளில் சென்று மேற்கொள்ள அறிவுறுத்தபடும். ரேசன் கார்டுகளில் வகை சில விதிமுறைகள் அடிப்படையில் மாற்றப்பட்டது. ஏழ்மையான நபர்கள் கார்டுகள் மாறி இருந்தால் விண்ணப்பம் அளிக்கலாம். எரிவாயு இணைப்பு இல்லாமல் இணைப்பு இருப்பதாக உள்ளவர்கள் எரிவாயு வழங்கும் வாகனங்களில் விண்ணப்பம் அளித்ததால் சான்று வழங்கப்படும் என்றார்.


கூட்டத்தில் நுகர்வோர் மைய நிர்வாகிகள் நௌசாத், மகேந்திரபூபதி, இந்திரஜித், ஜேசுதாஸ், செல்வி, பிரியா மற்றும் எரிவாயு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad