நீலகிரி உதகையில் படுக குனவே ஆம்புலன்ஸ் சேவை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 ஆகஸ்ட், 2025

நீலகிரி உதகையில் படுக குனவே ஆம்புலன்ஸ் சேவை


 நீலகிரி உதகையில் படுக குனவே ஆம்புலன்ஸ் சேவை: 


தாம்பட்டி சிவக்குமார்  தலைமையில் மக்களுக்கு பெரும் பயன் அளிக்கும் படுக குனவ கேப்ஸ் ஆம்புலன்ஸ்


அவசர காலங்களில் உயிரைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் சேவை – பொதுமக்கள் பாராட்டு


மலைநகரங்களில் திடீர் விபத்துகள், உடல்நலக்குறைவு போன்ற சூழல்களில், உடனடி மருத்துவ உதவி பெறுவது சிரமமாகவே இருக்கும். இந்நிலையில்  படுக குனவ  கேப்ஸ் (ஆம்புலன்ஸ் சேவை) பொதுமக்களுக்கு உயிர்காக்கும் நண்பனாக மாறியுள்ளது.


மலைப்பகுதி சாலைகள் சுருள்வழிகளாகவும், வாகன போக்குவரத்து மந்தமாகவும் இருக்கும் நிலையில், இந்த சேவை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தோரை அல்லது நோயாளிகளை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.



“முன்பு அவசர நிலைகளில் வாகனம் கிடைக்காமல் அலைந்து திரிய வேண்டியிருந்தது. இப்போது படுக குனவ கேப்ஸ் ஒரே அழைப்பில் வந்து உதவி செய்கிறது. இது எங்கள் குடும்பத்திற்கே அல்ல, முழு ஊருக்கும் பெரும் பயன்” என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


மருத்துவத் துறையின் இணைப்பு இந்த ஆம்புலன்ஸ் சேவை, அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்டு, நோயாளிகளை நேரடியாக சிகிச்சைக்கு அனுப்புகிறது. அதிலும், அடிப்படை முதலுதவி வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர், ஸ்ட்ரெச்சர் போன்றவை உட்படுவதால், மலைப்பகுதி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.


உயிர்காக்கும் சேவை தாம்பட்டி சிவக்குமார் தலைமையில் விபத்துகள், திடீர் இதய நோய், பிரசவ அவசரங்கள் போன்ற சூழல்களில், படுக குனவ கேப்ஸ் சேவை பலருக்கு உயிர்காக்கும் அர்ப்பணிப்பாக இருந்து வருகிறது. இதனால், “இது உண்மையான அருள் சேவை” என பொது மக்கள் புகழ்ந்து பேசுகின்றனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad