கோவில் கொடைவிழா, சாமிகள் கும்பம் எடுத்து திருவீதியுலா
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி முருகேசபுரம் வடக்குத்தெருவில் ஸ்ரீ பார்வதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆவணி கொடை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. திங்கட்கிழமை பார்வதி அம்மன் மற்றும் பரிவார மும்மூர்த்திகளுக்கு தீபாராதனை, இரவு திருவிளக்கு பூஜை நடந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை புனிதநீர் எடுத்து வருதல் , சிறப்பு தீபாராதனை, படைக்கஞ்சி படைத்து சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு புஷ்ப அலங்காரம் நையாண்டி மேளத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை பார்வதி அம்மனுக்கு நையாண்டி மேளத்துடன் தீபாராதனை, மஞ்சள் நீராட்டு, சுவாமிகள் கும்பம் எடுத்து திருவீதியுலா நடைபெற்றது. இதில் மாவட்ட திமுக பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில்,
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாபுஜி, ஒன்றிய சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சிங்கராஜா மற்றும் கோவில் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக