சமூக சேவகி இந்திராசுந்தரம் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

சமூக சேவகி இந்திராசுந்தரம் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைத்தார்


திருப்பூரில் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் தனது சொந்த செலவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு உடை மற்றும் தொழில் அமைத்து தருவது மற்றும் திருமணம் செய்து வைப்பது மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி

வருகிறார் தன்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவிகளையும் செய்து வரும் சிறந்த தாயுள்ளம் கொண்ட சமூக சேவகர் இந்திரா சுந்தரம் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஏழ்மை நிலை உள்ள குடும்பங்கள் நோயாளிகள் என அனைவரும் பயன்படும் வகையில் அவசர தேவைக்கும் நாங்கள் இருக்கிறோம் என்று தனது பிறந்த நாளில் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் இதையொட்டி நடந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வை தலைமை பொறுப்பாளர் ராஜா முகமது அவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் இந்திரா சுந்தரம் அம்மா அவர்களுக்கு அனைவரும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

தேவை உள்ளவர்களை தேடிச் செல்லும் இந்திராசுந்தரம் இலவச ஆம்புலன்ஸ் இன்று முதல் திருப்பூரில் முற்றிலும் இலவசமாக இந்த ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்படும் என்று இந்திராசுந்தரம் அவர்கள் தெரிவித்தார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad