கோத்தகிரி புத்தகத் திருவிழாவிற்கு மாணவர்கள் படையெடுப்பு .
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரிமா சங்கம் மற்றும் கோத்தகிரி கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தகத் திருவிழாவிற்கு மாணவர்கள் அலை அலையாக வந்தனர். மாணவர்கள் ஆர்வத்தோடு புத்தகங்களை வாங்கினார்கள். இந்த புத்தகக் கண்காட்சி அரங்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன புத்தகங்களை பார்ப்பதே மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதை காண முடிகிறது கல்வி ஒரு கொண்டாட்டம் என்று கூறுவார்கள் இந்த புத்தகத் திருவிழாவும் ஒரு கல்வி கொண்டாட்டமாக அமைந்தது குறிப்பாக கோளரங்கம் நிகழ்ச்சி மாணவர்கள் ஆரவாரமாக கொண்டாடினார்கள் இத்தகைய நிகழ்ச்சி பொதுமக்கள் பங்பேற்பு குறைவாக இருந்தது வருத்தம் அடையச் செய்கிறது இது குறித்து புத்தக திருவிழாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் திரு.கே.ஜே. ராஜு அவர்கள் கூறியதாவது .....
மாணவர்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் அட்டை படத்தை வாசித்து தொட்டுப் பார்த்து புது புத்தகத்தின் வாசத்தை முகர்ந்து பார்த்தது இயல்பிலேயே மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உடையவர்களாக இருப்பதை காண முடிகிறது கல்வி என்பது பாடபுத்தகம் மட்டுமல்ல நாம் படிக்க வேண்டியது தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது என்ற செய்தியை மாணவர்கள் புரிந்து கொண்டார்கள் இதுபோன்ற திருவிழாக்களில் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை விரும்பும் புத்தகத்தை வாங்கி கொடுக்க வேண்டும் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு டிவி இருப்பது போல ஒரு புத்தக அலமாரியும் அதில் புத்தகங்களும் நிறைந்து இருக்க வேண்டும் அதுதான் முழுமையான வீடு. அந்த சூழ்நிலை தான் மாணவர்களை அறிவார்ந்த சிந்திக்கும் திறன் உள்ள மனிதர்களாக மாற்றும். இந்த புத்தகத் திருவிழாவின் பின்னணியில் வேறு சில பரிமாணங்களையும் காண முடிகிறது. இந்த புத்தக விற்பனையாளர்கள் ஏதோ ஒரு வகையில் புத்தகத்தை விற்றுத்தான் தங்கள் அன்றாட செலவுகளை சந்திக்க வேண்டிய பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. இந்த புத்தக விற்பனையாளர்களில் சிலர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் எழுத்தாளர்கள் மெத்தப் படித்தவர்கள் பலர் இருப்பதை காண முடிகிறது . சுதந்திரப் போராட்ட காலத்தில் தியாகிகள் கதர் ஆடைகளை தோளில் சுமந்து கொண்டு விற்று மக்களிடையே தேசபக்தியை உருவாக்கியது போல புத்தக விற்பனை தொழிலாளர்கள் மக்களை சிந்திக்க வைப்பதற்காக புத்தகங்களை சுமந்து கொண்டு ஊர் ஊராக செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவிற்கும் நொறுக்குத் தீனி களுக்கும் தண்ணீர் போல் பணத்தை தண்ணீராக செலவு செய்யும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்வு வளம் பெறுவதோடு இந்த புத்தக விற்பனை தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படவும் புத்தகம் வாங்க வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். பொதுமக்கள் விடுமுறை நாட்களில் பெரும் அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக