பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னையின் நான்காம் திருவிழாவை முன்னிட்டு இணையூர் இறை மக்களின் கலை விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஆகஸ்ட், 2025

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னையின் நான்காம் திருவிழாவை முன்னிட்டு இணையூர் இறை மக்களின் கலை விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னையின் நான்காம் திருவிழாவை முன்னிட்டு 9.8.25அன்று மாலை 9 மணிக்கு இணையூர் இறை மக்களின் கலை விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது அதில் தென் மண்டல பணி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் தந்தை அருள் பணி பிரான்சிஸ் தலைமையேற்று சிறப்பு செய்தார்கள் 

அவர்களோடு இணைந்து பிரகாசபுரம்புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருள் சகோதரி அவர்களும் முன்னிலை வகித்து சிறப்பித்தார்கள் தோப்பூர் மறைக்கல்வி மாணவச் செல்வங்களும் உடையார் குளம் மறைக்கல்வி மாணவச் செல்வங்களும் பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினார்கள் அருள் பணி பிரான்சிஸ் அவர்கள் தலைமையுரை சிறப்பான முறையில் கூறினார்.

பிரகாசபுரம் பங்குத்தந்தை அருள் பணி ஆரோக்கிய அமல்ராஜ் அவர்கள் சிறப்பான முறையில் நன்றி கூறி இறை ஆசீர் கொடுத்தார்கள் கலை விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள் பாப்பிறைப் பண்ணோடு விழா இனிதே நிறைவுற்றது. பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad