உதகமண்டலம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் தமிழியக்கம் சார்பாக குழந்தைகளுக்கு கதைச்சொல்லி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நூலகர் அசினா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழியக்கம் தலைவர்
நல்லாசிரியர் அமுதவல்லி, தமிழியக்கம் ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் ரமணா, அண்ணாமலை பல்கலைக்கழகம் பதிவாளர் ஓய்வு நடராஜன்
ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
தமிழியக்கம் மாணவர் அணி பொறுப்பாளர்
சுதிர், சுபாசந்தர் ஆகியோர் மாணவ மாணவியருக்கு எழுதுகோல்களை வழங்கினர். தமிழியக்கம் தகவல் தொடர்பாளர்
ஜாபர் நன்றியுரை ஆற்றினார். புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக