திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை அலைக்கழிப்பு: சிவசேனா கண்டனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை அலைக்கழிப்பு: சிவசேனா கண்டனம்


திருவிடைமருதூர் அரசு  மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை அலைக்கழிப்பு: சிவசேனா கண்டனம்


தஞ்சாவூர் மாவட்டம் :திருவிடைமருதூர்  அரசு தலைமை மருத்துவமனையில் அலட்சியம் காட்டுகிறார்கள் நோயாளிகள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது என சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் தமிழக அரசுக்கும் மற்றும் சுகாதாரத்துறைக்கும்  கண்டன அறிக்கை அறிவித்துள்ளார்.அவர் பேசியதாவது:திருவிடைமருதூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணி செய்யும் பணியாளர்கள் நோயாளிகளிடம் கவனக்குறைவாகவும் அலட்சியதனமாகவும் செயல்படுகின்றனர் அதற்கு ஆதாரமாக இன்று.11.8.2025. அரசு மருத்துவமனையின் எக்ஸ்ரே சென்டரில் பணிபுரியும் ஒரு பணியாளர் செய்யும் அலட்சியதனத்தை வீடியோ ஆதாரமாக பதிவிடுகிறோம்.. அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் செயல்படும் அலுவலகங்கள் பணியாளர்கள் சரியான முறையில் பணி செய்யவில்லை குறிப்பாக எக்ஸ்ரே மற்றும்  இசிஜி   எடுக்க நோயாளிகள் வந்திருந்தால் உரிய நேரத்தில் ஸ்கேன் எடுக்க முடியாமல் பணியாளர்கள் அலை கழிக்கிறார்கள். தொடர்ச்சியாக அலட்சியம் செய்த அனைத்து பணியாளர்களையும் உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். 


மேலும் அரசு மருத்துவமனையில் .. எக்ஸ்ரேவுக்கு. இருபது ரூபாய் என அரசு நிர்ணயம் செய்து வசூல் செய்கிறார்கள். வசூல் செய்யப்படும் மக்கள் பணத்திற்கு உரிய ரசீதினை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசையும் சுகாதார துறையும் கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள் அரசு மருத்துவமனையில்  செலுத்தப்படும் பணம் தமிழக அரசுக்கு போய் சென்று அடைகிறதா என்பது பொது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் செலுத்தும் பணத்திற்கு உரிய ரசீதுணை அரசு முத்திரையுடன் வழங்கவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம். இதை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும்  என்பதை பொதுமக்கள் சார்பாக அரசுக்கு வலியுறுத்துகிறோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad