கசிநாயக்கன்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மாணவர் கள் பங்கேற்பு !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 11 -
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த கசி நாயக்கன்பட்டியில் உலக போதை பொருள் பயன்பாடு தடுப்பு மற்றும் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட காசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக போதை பொருள் பயன்பாடு தடுப்பு மற்றும் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வ லம் பள்ளிதலைமை ஆசிரியர் குழந்தை சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சிறப்பு
அழைப்பாளராக வட்டாட்சியர் நவநீதம் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர் வலத்தை கொடியசைத்து துவக்கி வைத் தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டு கசிநாயக்கன்பட்டி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக