விசிக சார்பில் தமிழகத்தில் தொடர்ச்சி யாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவக் கொலையை தடுக்க!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 11 -
ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தமிழக அரசே! தமிழக அரசே! தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவக் கொலையை தடுக்க!தமிழக அரசு உடனடியாக ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்றக்கோரி
விடுதலை சிறுத்தைகள் கட்சி ராணிப் பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டம் சார் பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர், நகர மன்ற துணைத் தலைவர் சீ மா, ரமேஷ் கர்ணா, மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு, கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபா இளநிலை நிலா ஆகி யோர்தலைமை வகித்தனர். ராணிப் பேட்டை தொகுதி செயலாளர் மாந் தாங் கள் ராஜா அனைவரையும் வரவேற்றார். ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட த்தின் பொருளாளர்கள், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், நகர ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னி லை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
சிறப்பு அழைப்பாளராக. மாநில முதன் மை செயலாளர் ஊடக மையம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்து கொண்டு கண்டன உரையாற்றி னார். முடிவில் நகர செயலாளர் ராஜ சேகர் நன்றி கூறினார்.
தமிழக சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக