நாசரேத் - செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு.கதிர்வீச்சை எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் அச்சம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

நாசரேத் - செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு.கதிர்வீச்சை எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் அச்சம்.

நாசரேத் - செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு.
கதிர்வீச்சை எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் அச்சம்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத் கிராமம் வியாபாரிகள் தெருவில் பல நூறு குடியிருப்புகளும் கடைகளும் இருந்து வருகிறது இங்கு பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணி முதியவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் வசித்து வருகின்றனர்.. 

ரயில் நிலையத்தின் எதிர்ப்புறத்தில், அருகாமையில் உள்ள 66/1 பி என்ற சர்வே நம்பரில் உள்ள இடத்தில் அலைபேசிக்கான கோபுரம் அமைக்க வேலை நடைபெறுகிறது. இந்த பகுதியில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் முதியோர் பலர் கதிர்வீச்சு தாக்குதல் மற்றும் ஒலி மாசு உள்ளதாக நேரிடும் என்பதால் இந்த அலைபேசி கோபுரத்தினை மேற்படி பகுதியில் அமைக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

இருந்த போதிலும், செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad