மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் ஆடி 18 திருநாள் தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, காலை அம்மனுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், திரவியப் பொடிகள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அடுத்து, அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், அம்மன் வீதி உலா வந்து வாடி ஆற்றங்கரையில் எழுந்தருளி காட்சியளித்தார். அங்கு அஸ்திரதேவிக்கும் பால், தேன், பன்னீர், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் முன்னிலையில் தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். விழாவின் நிறைவில் மீண்டும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக