மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தேசிய அளவிலான ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
7 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் ஆகிய மாணவர்கள் மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மொத்தமாக 1,000க்கும் மேற்பட்டோர் இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றனர்.
தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே பயிற்றுநர் விநாயகம் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கராத்தே, சிலம்பம், யோகா கலை நிபுணர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக