திண்டிவனம் சாலை விபத்தில் உயிரிழந்த திருமதி சரிதா குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.10 இலட்சம் நிவாரண நிதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

திண்டிவனம் சாலை விபத்தில் உயிரிழந்த திருமதி சரிதா குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.10 இலட்சம் நிவாரண நிதி.


விழுப்புரம் (ஆகஸ்ட் 2, 2025):
 


திண்டிவனம், இறையனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சரிதா, கடந்த 2.6.2025 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 இலட்சம் குடும்ப நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், 1.6.2025 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், “கழக உறுப்பினர்கள் யாராவது சாலை விபத்தில் உயிரிழந்தால், 21 வயதிற்குட்பட்ட வாரிசுகள் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.



அந்த அறிவிப்பின் அடிப்படையில், திருமதி சரிதா அவர்கள் இறையனூர் கிராமம் செல்லும் வழியில் திண்டிவனத்தில் செயின்ட் ஜோசப் பள்ளி அருகே சர்வீஸ் சாலையில் நடந்த விபத்தில் கடுமையாக காயமடைந்து, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று (02.08.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருமதி சரிதா அவர்களின் கணவர் எஸ். கண்ணன் அவர்களிடம் ரூ.10 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad