வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 கிலோ கஞ்சா பறி முதல்! சான் பாஷா என்பவர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 செப்டம்பர், 2025

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 கிலோ கஞ்சா பறி முதல்! சான் பாஷா என்பவர் கைது!

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 கிலோ கஞ்சா பறி முதல்! சான் பாஷா என்பவர் கைது!
வாணியம்பாடி,செப் 24 - 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண் காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத் தது.தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஜீவா நகர்,நேதாஜி நகர் ஆகிய பகுதிக ளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜீவா நகர் பகுதியில் கோழி வியாபாரி சான் பாஷா என்பவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து சான் பாஷாவை கைது செய்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நகர போலீஸார் சான் பாஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நாட்டுக்கோழி மற்றும் சண்டைக் கோழிகள் விற்பனை செய்து வருவதாக வும், கோழி வியாபாரத் தின் போது கஞ்சாவை சேர்த்து வியாபா ரம் செய்து வந்ததை தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad