திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 செப்டம்பர், 2025

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !
திருப்பத்தூர் , செப் 24 -

திருப்பத்தூர் மாவட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி பணியாளர் களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியா ளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad