கோடியே 34 லட்சம் மதிப்பில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை போட்ட எம்.எல்.ஏ!
திருப்பத்தூர் , செப் 24 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு புதிதாக கட்டிடம் அமைக்க பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சில மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலகம் அதே பகுதி யிலுள்ள வாடகை வீட்டில் நடை பெற்று வந்தது. இந்த நிலையில் நான்கு கோடி யே 34 லட்சம் மதிப்பில் புதிதாக வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் பூமி பூஜை போட்டு கட்டிடம் அமைக்கும் பணியை புதன்கிழமை இன்று நண்பகல் 12 மணியளவில் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கந்திலி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர். திருமுருகன். மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரிய குமார், கந்திலி ஒன்றிய செயலாளர் அசோக்குமார், குணசேகரன். கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ராஜ மாணிக்கம் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக