தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனை த்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
வேலூர் , செப் 24 -
மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி எஸ். செல்வம் பங்கேற்று கண்டனப் பேருரை!!!
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச் சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்களின் சங்கங்க ளின் கூட்டமைப்பின் சார்பில் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்ட மாபெரும் போராட்டம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜி ஞானசேக ரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் எஸ் வினோத்குமார் முன்னிலையிலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஸ்வ நாதன் வரவேற்புரையாற்றுகையில் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அனைத்து அரசு பணியாளர்கள் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி நல்லம்பள்ளி எஸ்,செல்வம் கலந்து கொண்டு கோரிக்கை குறித்த விளக்க பேருரையாற்றி ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.இந்த போராட்டத்தில் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்ட நடவடிக்கைகளாக செப்டம்பர் 24 மாவட்ட அளவிலான கவனஈருப்பு ஆர்பாட்டமும், செப்டம்பர் 29 ஒரு நாள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டமும், நவம்பர் 24 காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் செய்வதாக குறிப்பிட்டுள்ள னர். இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பேனர் மற்றும் பதாகைகளை கையி லேந்தி, ஊராட்சி செயலாளர்கள், தூய் மை பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு, தூய்மை காவலர் களின் மாதாந்திர ஊதியத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டியம், 01.06.2009 முதல் அரசாணை எண் 234ன்படி மக்கள் நலப் பணியாளர்களு க்கு வழங்கப்பட்ட சிறப்பு காலம்முறை ஊதியத்தை தற்போது காலமறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டி உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ், மாநிலஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணி, நல்.செல்லபாண்டியன், ம.ரவி, கே. பழனிசாமி, ஜி, ராதா, மாநில பொதுச் செயலாளர்கள் வேல்முருகன், முத்துமாரி, புதியவன், கார்த்திகேயன், செல்வராணி, சிவகாமி, மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில பொருளாளர்களுமான மகேஸ்வரன், இராமலிங்கம், இரங்கராஜ், மாரியப்பன், ஆத்மநாதன், முத்துமாரி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சி செயலாளர்கள், வேலூர் மாவட்ட பொருளாளரும், இறைவன்காடு ஊராட்சி செயலாளருமான அம்ஜத்குமார், சத்தியமங்கலம் (பொ) இலவம்பாடி ஊராட்சி செயலாளர் ஹரி கிருஷ்ணன் (பேர்ணம்பட்டு), பெருமாள், பாஸ்கரன், பாலமுருகன், யுவராஜ், அருள், தசரதன், நந்தகுமார், நீலமேகன் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரையாற் றினர். இறுதியில் வேலூர் மாவட்ட பொருளாளரும், இறைவன்காடு ஊராட்சி செயலாளருமான எஸ்.அம்ஜத்குமார் நன்றியுரையாற்றி இந்த மாபெரும் ஆர்பாட்டம் நிறைவுபெற்றது
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக