திருப்பத்தூரில் மூதாட்டி இடம் 1 1/4 சவரன் நகை நூதன முறையில் பறிப்பு பெண் ஒருவர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

திருப்பத்தூரில் மூதாட்டி இடம் 1 1/4 சவரன் நகை நூதன முறையில் பறிப்பு பெண் ஒருவர் கைது

திருப்பத்தூரில் மூதாட்டி இடம் 1 1/4 சவரன் நகை நூதன முறையில் பறிப்பு பெண் ஒருவர் கைது!
திருப்பத்தூர் , செப் 12 -

திருப்பத்தூர் மாவட்டம் நூதன முறையில் பாட்டிமா மூன்று கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கி யா? அப்படின்னா உனக்கு 40 ஆயிரம் வாங்கித் தருகிறேன் மூதாட்டிக்கு ஆசை வார்த்தை கூறி ஒன் னேகால் சவரன் தங்க நகை ஆட்டைய போட்ட பெண் கைது‌ கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிக்கல் நாத்தம் பகுதியைச் சார்ந்த பெரிய கருப் பனின் மனைவி சரோஜா(வயது 60) ஆவர் அவ்வப்போது பெரிய மட்றபள்ளி யில் உள்ள ‌ தனது தாயார் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் இதனை சில நாட்களாக நோட்டமிட்ட ‌பெண் ஒருவர் சரோஜா கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அவருடன் பேருந்தில் அந்த பெண் ணும் பயணித் துள்ளார் அப்போது அந்த மூதாட்டி இடம் பெண் பேச்சுக் கொடுத்து நீ கொரோனா காலகட்டத்தில்  மூன்று தடுப்பூசிகளும் போட்டு இருக்கீங்களா? அப்படினா அரசாங்கம் 40,000 கொடுக் கிறது.
இது உங்களுக்கு தெரியாதா? என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி அந்த பெண்ணுடன்  பர்கூரில் உள்ள ‌ அரசு  அலுவலகத்திற்கு பணத் தைப் பெற்றுக் கொள்ள  வந்துள்ளார். 
அப்போது இங்கு அலுவலகங்கள் மூடி உள்ளது எனவே திருப்பத்தூரில் உள்ள அரசு அலுவலகத்தில்  40 ஆயிரம் பணத் தை வாங்கித் தருகிறேன் வா எனக்கூறி அங்கிருந்து திருப்பத்தூர் அழைத்து வந்துள்ளார். அப்போது மூதாட்டியை  புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி  போட்டோ ஸ்டூடியோக்கு கூட்டிட்டு வந்து புகைப்படம் எடுக்கும் போது நகைகள் இருக்கக் கூடாது எனக் கூறியதால் அந் தப் பெண்ணை நம்பி மூதாட்டி தனது காதில் இருந்த ஒன்னேகால் சவரன் தங்க நகையை கழட்டி கொடுத்துள்ளார். 
அப்போது போட்டோ எடுத்து விட்டு வெளியே வரும் நேரத்தில் அந்தப் பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் செய்வதறியா மல் திகைத்த மூதாட்டி இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்ட திருப்பத்தூர் நகர போலீசார் அந்த போட்டோ ஸ்டூடியோவில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாலப் பள்ளி பகுதியைச் சார்ந்த முனிராஜியின் மனைவி பழனியம்மாள் (வயது 40) என்பவர் மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மேலும் மூதாட்டி இடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தையும் ஒப்புக்கொண்டார். எனவே திருப்பத்தூர் நகர போலீசார் பழனியம் மாளை கைது செய்தனர்.கொரோனா ஊசி போட்டிருந்தால் 40 ஆயிரம் பணம் தருகிறேன் என மூதாட்டியை நூதனமான முறையில் பெண் ஏமாற்றிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத் தியது‌.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad