திருப்பத்தூர் அருகே 13 வயது சிறுமிக்கு காதலிக்க தொந்தரவு செய்த 19 வயது வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
திருப்பத்தூர் , செப் 12 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரேம்குமார் (வயது 19) என்பவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில்உள்ள (13 வயது) சிறுமியை பிரேம் குமார்
என்னை காதலிக்க வேண்டும் எனவும் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனை சிறுமி பெற்றோரிடம் கூறியுள் ளார் பெற்றோரும் பிரேம்குமார் அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் எச்சரித்து அனுப்பியுள் ளனர்.மேலும் சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்தார்
சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பிரேம்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதி மரத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
(13 வயது) சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக