வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 1221 கிலோ, குட்கா பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 செப்டம்பர், 2025

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 1221 கிலோ, குட்கா பறிமுதல்!

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 1221 கிலோ, குட்கா  பறிமுதல்! 

வேலூர் , செப் 11 -

வேலூர் மாவட்டம் போதையில்லா மாவட் டமாக உருவாக்க மாவட்ட காவல்துறை யின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையில், இந்த ஆண்டு 01.01.2025 முதல் 07.09.2025 வரை சட்டவி ரோத குட்கா விற்பனை தொடர்பாக 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 119 எதிரி கள் கைது செய்யப்பட்டு, 2373 கிலோ குட் கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 இரு சக்கர மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இன்று 10.09.2025-ம் தேதி பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட் கா பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பேரணாம்பட்டு தனிப்பிரிவு காவலர் திரு.நந்தகுமார் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர்  பிரபு அவர்களின் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில், தரை க்காடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான வாடகை கட்டிடத்தில், சட்டவிரோத மாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்த 1221 கிலோ குட்கா பொருட் களை கைப்பற்றி, பேரணாம்பட்டு பகுதி யை சேர்ந்த எதிரிகள் 1) ரஷீத் அகமது, வ/50, த/பெ.அப்துல் காலிக், ஏரிகுத்தி. 2)காஜா ஷெரிப், வ/22, த/பெ.அஸ்லாம் ஷெரிப், தரைக்காடு மற்றும் 3) பைரோஸ் அகமது, வ/30, த/பெ.ரஷீத் அகமது, ஏரி குத்தி என்பவர்களை கைது செய்து, பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என வேலூர் மாவட்ட காவல்துறை யின் சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad