தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி வாரியார் தெரிவித்தார்.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ் .பி. வாரியார் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது
தூத்துக்குடியில் ஒரு சில வழக்கறிஞர்கள் இன்று விவிடி சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி மற்றும் கார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நடைபெற்றது
ஒரு சிலர் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
கடந்த 3.4.2018 அன்று நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆதரவாக எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மேலும் ஸ்டெர்லைட் ஆலைகள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக சட்ட வழக்கறிஞர்கள் கோர்ட்டில் வாதாடி வருகிறார்கள் மேலும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் தூத்துக்குடி கோர்ட் நுழைவாயில் மட்டுமே நடத்தப்படும் வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் என்று வழக்கறிஞர்கள் வெளியே போராட்டம் நடத்தினால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்
பேட்டியில் போது துணைத் தலைவர் சிவசங்கரன் செயலாளர் செல்வின் பொருளாளர் கணேசன் இணைச்செயலாளர் பாலகுமார் முன்னாள் தலைவர் தனசேகர் டேவிட் மூத்த வழக்கறிஞர் ஏ டபுள்யூ டி திலக் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக