தூத்துக்குடி வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் இதைகண்டித்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து அரசு ஆலையை மூடியுள்ள நிலையில் ஆலைக்கு எதிரான பேராட்டத்தில் 15 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விவிடிசிக்னல் அருகே வழக்கறிஞர்கள் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. பொதுமக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உள்ளது எனவே காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுப்பதோடு தமிழ்நாடு பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபடும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக