குடியாத்தத்தில் போதை மாத்திரைகள் ஊசிகள் வைத்திருந்ததாக 4 இளைஞர் கள் கைது!
குடியாத்தம், செப் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி பகுதியில் சில இளைஞர்கள் போதை மாத்திரைகள் ஊசி பயன்படுத்து வதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து நகர காவல் ஆய் வாளர் ருக்மாங்கதன் தலைமையில்
உதவி ஆய்வாளர் ஜெயந்தி சிறப்பு ஆய் வாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் பெரும்பாடி பகுதியில் தீவிர ரோந்துபணி யில் ஈடுபட்டனர் அப்போது முல்லை நகர் பகுதியில் கும்பலாக நின்றிருந்த 4இளை ஞர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடி த்து விசாரணை செய்தனர் விசாரணை யில் அவர்கள் எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த ஐயப்பன் மோகன் நவீன் குமார் தேவன் என்பது விசாரணையில் தெரிய வந்தது மேலும் அவர்களை சோதனை செய்ததில் பாக்கெட்டில் போதை மாத்தி ரைகள் ஊசி ஆகியவற்றை வைத்திருப் பது தெரிய வந்தது அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் ஊசி டூ வீலர் ஆகி யவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்
இதை அடுத்து நான்கு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் இன்னும் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக