பேரணாம்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 செப்டம்பர், 2025

பேரணாம்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்!

பேரணாம்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்!
பேரணாம்பட்டு , செப் 10 -

பேரணாம்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்,வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு காவல்  நிலையத்திற்கு உட்பட்ட பேரணாம்பட்டு வீ கோட்டா செல்லும் சாலையில் உள்ள எல் ஆர் நகரில் உள்ள ஒரு தனியார் வீட்டில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் பதுக்கி வைத்திருப்பதாக பேரணாம் பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு க்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் பேர ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டினை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ், பான்மசாலா போன்ற 82 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்துள்ளது.உடனே அத னை பரிமுதல் செய்த போலீசார் இருவ ரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad