தூத்துக்குடியில் 1/2 கிலோ கஞ்சா - அருவாளுடன் வாலிபர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

தூத்துக்குடியில் 1/2 கிலோ கஞ்சா - அருவாளுடன் வாலிபர் கைது.

தூத்துக்குடியில் 1/2 கிலோ கஞ்சா - அருவாளுடன் வாலிபர் கைது 

தூத்துக்குடியில் கஞ்சா மற்றும் அரிவாளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்  இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன், தனிப்பிரிவு காவலர் ஜாண்சன், தலைமை காவலர்களான முத்துமணி, திரவிய ரத்தினராஜ், சமியுல்லா ஆகியோர் முள்ளக்காடு சாமி நகர் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த முள்ளக்காடு சாமி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சின்னராசு (30) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 1 அருவாள் கைப்பற்றப்பட்டது. 

பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad