தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா, பல்வேறு கட்சியினர் மரியாதை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா, பல்வேறு கட்சியினர் மரியாதை


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி, திமுக சார்பில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதையொட்டி, உடுமலை சாலையில் தீவுத்திடலில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ வெங்கல சிலைக்கு, அமைச்சர் கயல்விழி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நகரச் செயலாளர் முருகானந்தம் உட்பட, பல்வேறு நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


இதேபோல, திராவிடக் கழகத்தினர், தமிழ் புலிகள் கட்சியினர், ஈசிக கட்சியினர், ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் முன்னேற்றக் கழகம், ஆதி தமிழர் ஜனநாயகப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிலை அருகே திரண்டு வந்ததால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, போலீசார் தீவிரமாக கண்காணிப்பு மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad