தாராபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா தவெக சார்பில் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

தாராபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா தவெக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


உடுமலை சாலையில் அமைந்துள்ள தீவுத்திடல் பெரியார் பூங்காவில் உள்ள ஈரோடு பெரியார் வெங்கல சிலைக்கு தாவேக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் கராத்தே கோவிந்தராஜ், சுஜித் குமார், நகரச் செயலாளர்கள் அபுதாகிர், சார்லி, மகளிர் அணியினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதற்கு முன் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்த தாவேக தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி, "ஈரோடு பெரியார் வாழ்க", "அண்ணன் விஜய் வாழ்க" என முழக்கமிட்டு உற்சாகமாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad