ஸ்ரீவைகுண்டம் செப்டம்பர் 16. நவதிருப்பதிகளில் ஒன்றாவது கோவில் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில்.நேற்று பிஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி. அதனை முன்னிட்டு இன்று உறியடி நடந்தது.
காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு தீபாராதனை. 11 மணிக்கு சாத்து முறை. தீர்த்தம் சடாரி. பிரசாதம். வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. பின்னர் 7.30 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் தாயார்களுடன் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டும் கிருஷ்ணன் சிறிய பல்லக்கிலும் கோவில் பந்தல் மண்டபம் முன்பு உறியடி விழா நடந்தது.
சிறுவர்கள் வழுக்குமரம் ஏறி அதில் உள்ள பலகாரங்கள் மற்றும் நிதி எடுத்தனர். பின் ஸ்வாமி கள்ளப்பிரான்.மற்றும் கிருஷ்ணன் தை வீதி வலம் வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். நாராயணன் .வாசு.ராமாநுஜம். சீனு. ஸ்தலத் கார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன்.தேவராஜன். நிர்வாக அதிகாரி சதீஷ். அறங்காவலர் குழுத்தலைவர் அருணா தேவி கொம்பையா.மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். முத்துகிருஷ்ணன்.பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக