தமிழக சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி ஆண்டுதோறும் “சமூக நீதி நாளாக” கொண்டாடப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி, சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகள், மத வேறுபாடுகளை உதறித் தள்ளி பெண்களை சம நிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 –ஆம் நாள் ஆண்டுதோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் “சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று (17.09.2025), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
மேலும், அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆகியோர் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேது ராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு மற்றும் அனைத்துத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக