ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 செப்டம்பர், 2025

ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்.

ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் முன்னெடுப்பான ஊர்காவல் கண்காணிப்பு திட்டம் (ஒரு காவலர் இரண்டு -CCTV)மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
உத்தரவுப்படி நாகர்கோவில் மற்றும் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள். லலித் குமார் மற்றும் ரேகா ஆர் நங்லோட் IPS, கன்னியாகுமரி தக்கலை மற்றும் மார்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயச்சந்திரன், பார்த்திபன், நல்லசிவம் ஆகியோர் மேற்பார்வையில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட போலீசார் கிராமத்திற்குள் சென்று பொதுமக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் உதவிகளை செய்து பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றனர் . 

இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் ஒத்துழைப்புடன் இதுவரை மொத்தம் 1350 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குறிக்கோளான அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்கை எட்டுவதற்கும் இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad