கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு தக்கலை, போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 2 கிலோ 300 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கொல்லங்கோடு, புத்தன்வீடு பகுதியை சேர்ந்த வல்சல ராஜ் என்பவரின் மகன் அஜின் (29) இடைக்கோடு பகுதியில் வசித்து வரும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் உமர்தீன் (25)ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுபவர் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக