கடலூர் மாவட்டத்தில் 2 கோடியே 52 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு அமைச்சர் அர்ப்பணிப்பு
கடலூர் செப் 07 கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் மற்றும்சிதம்பரம்வருவாய் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 52 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்குகடலூர்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். அடிக்கல் நாட்டினார்,
பின்னர் பல்வேறு நிறைவடைந்த திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது :
"தமிழ்நாட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடவும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு துறை கள் மூலம்அடிப்படைஉட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது
மாணவர்கள் உயர்தர கல்வியினை பாதுகாப்பான சூழலில் பெறவும், அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கிலும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கூடுதல் இடவசதிகளுடன் மாணவர்கள் கல்வி கற்றிடும் பொருட்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் பழைய வகுப்பறைகள்புனரமைக்கப்பட்டும் வருகிறது.
அவ்வகையில் காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ரெட்டியூர் அரசுமேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொன்றிற்கும் 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுமாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட் டுள்ளது.
ரெட்டியூர் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் சமையலறை கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் 7 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறை புதியதாக கட்டப்பட் டுள்ளது.தற்போது புதிய சமையல் அறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் இப்பள்ளியில் பயிலும் 77 மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டும், உணவு தேவையினை பூர்த்தி செய்திடும் வகையிலும் பொதுமக்களின் குடியிருப்பு அருகிலேயே குடிமைப் பொருட்கள் சுலபமாக கிடைத்திடும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.8, உடையார்குடி அண்ணாநகரில் 12 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், லால்பேட்டை பகுதி யில் வார்டு எண்.1 அம்பேத்கர் வீதி யில் 11 இலட்சத்து.50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டபட்டுள்ள நியாய விலைக்கடைகளும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோயில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 61.30 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலகவசதி, தங்கும் அறை, சமையலறை, கழிப்பறை உள்ளிட்டஅத்தியாவசிய வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட் டுள்ளது.
காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குப்பை அகற்றவும், தூய்மைப் பணியாளர் களுக்கு வேலையினை சுலபமாக் கிடும் பொருட்டும் 7 ஊராட்சிகளில் ஒவ்வொன்றிற்கும் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 19 இலட்சத்து.95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் குப்பைகளை சேகரிக்கவும், அவற்றைசேகரிப்புமையங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் மின்சார வண்டிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப் பட்டுள்ளது. இவ்வண்டியின் மூலம் தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தெருக்களிலுள்ள குப்பையை உரிய நேரத்தில் சுத்தம் செய்யவும் அனைத்து இடங்களுக் கும் சென்றுவர அமைகிறது.
பேட்டரி மூலம் இயங்குவதால் ஊராட்சிக்கு செலவினமும் குறைகிறது.
தமிழ்நாடு அரசு மூலம் வழங்கும் மருத்துவ வசதிகளை கிராமப்புற பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகை யிலும், நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று மகப்பேறு சிகிச்சை மேற்கொள்வதை குறைத்து உள்ளூரிலேயே பிரசவம் மேற்கொள்ளவும், அவசர காலங் களில் அருகிலேயே பொதுமக்கள் மகப்பேறு சிகிச்சை மேற்கொள் ளவும் சுகாதாரத் துறை சார்பில் சுகாதார நிலையங்களிலே நோயாளிகள் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் படுக்கை வசதி, காத்திருப்போர் அறை, மருந்தகம் உள்ளிட்ட வசதி களுடன் துணை சுகாதார நிலையங்கள் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காட்டுமன்னார் கோயில் வட்டத்திற்குட்பட்ட டி.நெடுஞ்சேரி, சிதம்பரம் வட்டத்திற் குட்பட்ட மதுராந்தகநல்லூர் மற்றும் கீரப்பாளையம் துணை சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிக்கும் 30 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு டி.நெடுஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து திறந்து வைக்கப்பட் டது
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் விநியோகம், மின் விநியோகம், கூட்டுக்குடிநீர் திட்ட செயல்பாடு மற்றும் பணிகள், நகராட்சிப் பகுதியில் மேற்கொள் ளப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் குறித்து துறை அலுவலர் களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட் டது."
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ர.அ.பிரியங்கா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக