கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோத லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த9 பேர் அதிரடி கைது
கடலூர் செப் 07 கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோத லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வோரிடம் தொடர்பிலிருந்த சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், மற்றும் போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இந்த சட்ட விரோத லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வோரை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்
அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பொறுப்பு) பி என் இராஜா மேற்பார்வையில், சிதம்பரம் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொறுப்பு அம்பேத்கர் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் முருகன் மகேஷ், காவலர் கள் பாலாஜி பாபு மணிகண்டன் கிருஷ்ணகுமார் உள்ளிட்டபோலீசார் சிதம்பரம் நகர பகுதிகளில் சட்ட விரோத லாட்டரி விற்பனை செய்தவர்களை கைது செய்தனர்
சிதம்பரம். பூதக்கேணி பகுதியில் வசிக்கும் அப்துல் மஜீத் மகன் அனுர்தீன் (வயது63), நசீர்சமுபாய் காமாட்சி அம்மன் கோவில் தெரு வெங்கட ராஜகுரு மகன் பிரபு (வயது 41) எம் கே தோட்டம் சோமு மகன் சுப்பிரமணி (வயது 24 மன்னார்குடி தெரு,முனியன் மகன் பிரகாஷ் வயது 32 செங்கட்டான் தெரு ராமலிங்கம் மகன் அழகேசன் வயது 42 ரவி வயது, 45 கேகே சிநகர் நசீர்சமுபாய் மந்தகரை சேகர்மகன் சபிராஜ் வயது 39 ஆகியோரை கைது செய்தும் அவர்களிடமிருந்து 350 ரூபாய், லாட்டரி விற்பனை தொழிலுக்கு பயன்படுத்திய 3 செல்போன்கள், 4 ரசீது புத்தகம் ஆகியவற்றை கைப்பற்றியும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக