திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தினசரி சந்தை கட்டடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் முன்னிலையில் இன்று மாலை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசுகையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:
“முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த அனைத்து திட்டங்களும் விரைவாக மக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு, பள்ளி சிறார்களுக்கு ‘கண்ணொளி காப்போம்’ திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
தொடர்ந்து, தாராபுரம் நகராட்சி சி.எஸ்.ஐ தேவாலயம் எதிரில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் சர்வே வார்டு 6, பிளாக் 3, சார்வே எண் 90 பகுதியில் 55 தினசரி காய்கறி கடைகளும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ரூம் மேலும் ஒரு உணவகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ள இதனுடன் சேர்த்து புதிய சந்தை கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், நகர செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் எம்.ரவிச்சந்தரன், நகராட்சி ஆணையர் ச.முஸ்தபா, நகராட்சி பொறியாளர் சுகுசுகந்தி, உதவி பொறியாளர் கதியாகராஜன், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக