திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலையில் தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி உள்ளிட்ட பலர் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்தது. முருகானந்தம், பள்ளி நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் நிலம் தொடர்பான விவகாரத்தால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமா மற்றும் முகில் ஆகியோரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதுவரை முருகானந்தம் கொலை வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக