பீலா வெங்கடேசன் ஐ. ஏ. எஸ் நினைவஞ்சலி : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

பீலா வெங்கடேசன் ஐ. ஏ. எஸ் நினைவஞ்சலி :


தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் மறைவையொட்டி, இந்தியா ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஈரோட்டில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சங்கத்தின் இணைச்செயலாளர் பி. சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் எம். டி. ஈஸ்வரன், செயலாளர் கே. மாணிக்கம், பொருளாளர் இன்ஜீனியர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad