ஆழ்வார்திருநகரி. செப் 27 ஆழ்வார்திருநகரி தெற்கு மாடவீதியில் ரெங்கநாதர் சன்னதி உள்ளது. புரட்டாசி 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 6.15 மணிக்கு விஸ்வரூபம். 10.30 மணிக்கு நவகலச திருமஞ்சனம்.
11.30 மணிக்கு தீபாராதனை. 12 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவை.1 .00 மணிக்கு சாத்து முறை கோஷ்டி. பின்னர் தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு சாயரட்சை. உற்சவர் ரெங்கநாதர் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 7.55 மணி அளவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கோவிலின் உள் பிரகாரத்தில் கருட வாகனத்தில் உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளைச் ரெங்கநாதர் சேவா சமிதி செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக