குடியாத்தம் அருகே 36 கிலோ கஞ்சா . மற்றும் லாரி பறிமுதல் இருவர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 செப்டம்பர், 2025

குடியாத்தம் அருகே 36 கிலோ கஞ்சா . மற்றும் லாரி பறிமுதல் இருவர் கைது

குடியாத்தம் அருகே 36 கிலோ கஞ்சா . மற்றும் லாரி பறிமுதல்  இருவர் கைது 
குடியாத்தம் , செப்  20 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வழியாக ஆந்திர மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகளில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பரதராமி காவல் உதவி ஆய்வாளர் சேகரன் மற்றும் போலீசார் பரதராமி அடுத்த பெருமாள் பல்லி சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மேற்கு வங்காளம் மாநிலத்திலிருந்து ஈரோடுக்கு தோல்கள்
ஏற்றி வந்த ஒரு லாரியை மடக்கி சோத னை செய்ததில் அதில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. 
இது சம்பந்தமாக லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலு காவை சார்ந்த முத்துக்காளை (வயது 30) த/ பெ கருப்புசாமி திருச்செந்தூரான் 
(வயது 47).த/ பெ. கண்ணுசாமி . ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2 கிலோ கஞ்சா. மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர் இன்று லாரியை சோதனை செய்ததில் மீண்டும் சுமார் 34 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இது சம்பந்தமாக போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad