அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 செப்டம்பர், 2025

அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்!!

அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்!!
அணைக்கட்டு , செப் 20 -

மாவட்ட ஆட்சியர் மற்றும் அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் பங்கேற்று சிறப்பு பார்வை!!


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலு கா, பொய்கை ஊராட்சி, பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகு மார், ஆகியோர் கலந்து கொண்டு மருத் துவ முகாமை பார்வையிட்டு, தொடங்கி வைத்து, முகாமில் மாற்றுத் திறனாளி களுக்கு அடையாள அட்டைகளை வழங் கினார்கள். இந்நிகழ்வின்போது அணைக் கட்டு ஒன்றியக்குழு துணை தலைவர் சித்ரா குமராபாண்டியன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பரணித ரன், இணை இயக்குநர் (மருத்துவ பணி கள்) மரு.பியூலா ஆக்னஸ், வட்டாட்சியர் சுகுமார், அணைக்கட்டு திமுக கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் கே.எஸ்.பழனி வேல், மாவட்ட கவுன்சிலர் ஆர்.ராகப்பிரி யா சீனிவாசன் பி.எஸ்.சி., பி.எட்., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, ஹேமலதா, பொய்கை ஊராட்சி மன்ற தலைவர்  வெங்கடேசன், சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், பாமக அமைப்பு செயலாளர் அக்னி வேல்முரு கன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்த மருத்துவ முகாமை சிறப்பித்தனர். எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச் சிகளும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad