ராணிப்பேட்டையில் 3 அம்ச கோரிக்கை கள் முன் வைத்து அங்கன்வாடி ஊழியர் கள் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

ராணிப்பேட்டையில் 3 அம்ச கோரிக்கை கள் முன் வைத்து அங்கன்வாடி ஊழியர் கள் ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டையில் 3 அம்ச கோரிக்கை கள் முன் வைத்து அங்கன்வாடி ஊழியர் கள் ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டை , செப் 26 -

ராணிப்பேட்டை அங்கன்வாடி ஊழியர்க ளின் நீண்டகால கோரிக்கைகளான பணி நிரந்தரம், பென்ஷன், பணிக்கொடை வழங்க கோரி மாவட்ட இணை செயலா ளர் பாரதி தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட அமைப்பாளர் ஆ. தவராஜ், லிக்காய் மாநில செயலாளர் தா. வெங்கடேசன், கட்டுமானம் மாவட்ட தலைவர் என். ரமேஷ், ஆட்டோ மாவட்ட செயலாளர் பி. மணி, ம.கோவலன், சங்க மாநில செயலா ளர் அமிர்தவள்ளி, மாவட்ட பொருளாளர் மாலதி, மாவட்ட இணை செயலாளர்
சி.ரேவதி, வட்டாரத் தலைவர் விமலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதி யம் ரூ. 9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக
ரூ.10 லட்சமுமம், உதவியாளருக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து கண்டன உரையாற்றி முடக்கங்களை எழுப்பினர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad