ராமநாதபுரம் முதல்வர் வருகை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மூடாமல் தார் சாலைகளுக்கு வெள்ளை கோடுகள் மட்டுமே போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

ராமநாதபுரம் முதல்வர் வருகை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மூடாமல் தார் சாலைகளுக்கு வெள்ளை கோடுகள் மட்டுமே போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் முதல்வர் வருகை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மூடாமல் தார் சாலைகளுக்கு வெள்ளை கோடுகள் மட்டுமே போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ராமநாதபுரம் நகராட்சி குண்டுக்கரை முருகன் கோவில், வனசங்கரி மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் போடப்பட்டுள்ள தார் ரோடுகளில் மேல் சுத்தம் செய்து இருபுறமும் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பள்ளங்களை மூடி சரி செய்யாமல் வெள்ளை கோடுகள் மட்டுமேஇரு புறமும் போட்டு செல்கின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக மழை பெய்யும் நேரங்களில் கழிவு தேங்கி நிற்பதும். மழைநீர் செல்வதற்கு வழியில்லாமலும் தேங்கி துர் நாற்றம் வீசுவதும் தொடர்ந்து வருகிறது. இதற்கு நிரந்தரமாக தீர்வுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad