ஆங்கிலேயர் கால மருத்துவமனை கட்டிடத்தை இடிக்காமல் புதுப்பிக்க வேண்டும் – அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

ஆங்கிலேயர் கால மருத்துவமனை கட்டிடத்தை இடிக்காமல் புதுப்பிக்க வேண்டும் – அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்.


மயிலாடுதுறை, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள அரசு மருத்துவமனை ஆங்கிலேயர் காலத்தில் 1939 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்நகரில் தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையின் முக்கிய கட்டிடம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேக்கு மரப் பொருட்களால் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக உறுதி தன்மையோடு நிலைத்துள்ளது. நிலை ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் தேக்கு மரத்தில் உறுதியாக உள்ளன.


சமீபத்தில், அரசு இந்த கட்டிடத்தை இடித்து மாற்று கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போட திட்டமிட்டதாகவும், தேக்கு மரப் பொருட்களை எடுப்பதற்காக கட்டிடத்தை இடிக்க விரும்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு தரப்பினர் கட்டிடத்தை இடிக்காமல் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையை பரிசீலித்து அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார். அவர் கட்டிடத்தை பாதுகாக்க, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடத்தை அருகிலுள்ள வாடகை நிலத்திலேயே கட்ட வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.


பவுன்ராஜ் தெரிவித்திருப்பது: இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாதால், பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தலாம் என எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad