நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழகமெங்கும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துள்ளார் இந்த நிலையில திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருமதி அபிநயா பிரேம்குமார் அவர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது இந்த நிலையில் திருப்பூர் வடக்கு பகுதி பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் முன்பு திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி அபிநயா பிரேம்குமார் அவர்களை அறிமுகம் செய்து வைக்கும் பொது கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேட்பாளர் திருமதி அபிநயா பிரேம்குமார் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். மேலும் நாம் தமிழர் கட்சியின் மாநில மண்டல மாவட்ட தொகுதி மாநகர ஒன்றிய நிர்வாகிகள் பாசறை நிர்வாகிகள் மகளிர் பாசறை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக